தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : ஏப் 21, 2024 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2024 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண் கொலை


பெங்களூரு கொடிகேஹள்ளி பத்ரப்பா லே - அவுட்டில் வசித்தவர் ஷோபா, 48. இவருக்கு 2 மகள்கள். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. மூத்த மகள் நேற்று காலை, ஷோபாவுக்கு மொபைல் போனில் அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் எடுக்கவில்லை.

இதனால் மகள் வீட்டிற்கு வந்து பார்த்த போது, ஷோபா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரை மர்ம நபர்கள் கொன்றது தெரிந்தது. விசாரணை நடக்கிறது.

ரவுடி கொலை


ஷிவமொகா பாபுஜி நகரில் வசித்தவர் சுரேஷ் என்ற மென்டல் சூரி, 45. ரவுடி. நேற்று காலை, பாபுஜி நகரில் உள்ள கங்கம்மா கோவில் அருகே அமர்ந்து இருந்தார்.

அப்போது அங்கு வந்த மூன்று பேர், கிரிக்கெட் மட்டையால் அடித்து சுரேஷை கொன்று விட்டு தப்பினர். என்ன காரணம் என்று தெரியவில்லை.

இரு ரவுடிகள் கைது


பெங்களூரு காமாட்சிபாளையாவை சேர்ந்தவர் கிரி என்ற குனிகல் கிரி. ரவுடி. இவரை கொல்ல சதித் திட்டம் நடப்பதாக, சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி ரவுடிகள் சிலிண்டர் சுனில், அவினாஷ் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும், ரவுடியான ராபரி கிட்டி கூறியதால், கிரியை கொல்ல இருவரும் திட்டம் தீட்டியது தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us