தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


ADDED : மே 14, 2024 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்லுாரி மாணவர் தற்கொலை


தட்சிண கன்னடா, மங்களூரின், பெள்ளாரே நெட்டாரு கிராமத்தை சேர்ந்த சரண், 20, கல்லுாரியில் படித்தார். உடல் நிலை பாதிப்பு, மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று மதியம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீர்வீழ்ச்சியில் மூழ்கி ராணுவ ஊழியர் பலி


குஜராத்தை சேர்ந்த சவுத்ரி கவுஷிக், 26, பெங்களூரின், நீலசந்திராவில் உள்ள மிலிட்டிரி பயிற்சி மையத்தில் பணியாற்றினார். இவர் தன் நண்பர்களுடன், நேற்று முன் தினம் மாலை, மாண்டியா, மலவள்ளியின், சிவசமுத்ராவில் உள்ள ககனசுக்கி நீர்வீழ்ச்சிக்கு வந்தார். அப்போது கால் தவறி விழுந்த அவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பைக் விபத்தில் இளைஞர் கொலை


பெங்களூரின், யஷ்வந்த்பூரில் வசித்த வினோத் குமார், 27, தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் நேற்று அதிகாலை, ஆர்.பி., சாலையின், ஆறாவது கிராசில், காயத்ரி நகர் அருகில் பைக்கில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையில் விழுந்தது. இதில் காயமடைந்த அவர் உயிரிழந்தார்.

திருமண ஏக்கம் பெண் தற்கொலை


ஹூப்பள்ளியின், பிட்னாளா கிராமத்தில் வசித்தவர் ஆர்த்தி, 36. இவருக்கு இவ்வளவு வயதாகியும், திருமணம் ஆகவில்லை. இதனால் மனம் வருந்திய அவர், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு


உத்தரகன்னடா, ஜோயிடாவின், பாண்டரி ஆற்றுக்கு நேற்று முன் தினம் மாலை, நீச்சலடித்து விளையாட நான்கு மாணவர்கள் சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அபான் கான், 12, முபாரக மெஹபூப் படான், 11, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us