
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நான் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தீவிர ரசிகன். நான் எம்.எல்.ஏ., ஆனதும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். தன் வீட்டிற்கு வரும்படி எனக்கு அழைப்பு விடுத்தார். ஆந்திர சட்ட சபை தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்றதும் அவருக்கு வாழ்த்து கூறினேன். சிரஞ்சீவியுடன் சேர்ந்து படத்தில் நடிக்க உள்ளேன். என்ன கதா பாத்திரம் என்று விரைவில் கூறுவேன்.
சிரஞ்சீவியுடன் சேர்ந்து நடனம் ஆட ஆர்வமாக உள்ளேன். எனது அரசியல் வாழ்க்கையிலும் சிலரை ஆட வைத்து, ஆட்டம் காட்டி உள்ளேன். சிரஞ்சீவியுடன் சேர்ந்து, சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகர் நடனம் ஆடினால் எனக்கு மகிழ்ச்சி.