ADDED : ஜூன் 15, 2024 04:25 AM

ஹூப்பள்ளி: 'கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள நடிகர் தர்ஷன், விவசாய துாராக நீடிக்க முடியாது,'' என தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நடிகர் தர்ஷனுக்கு வி.ஐ.பி., வசதிகள் வழங்கவில்லை. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தண்டிக்கப்படுவார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன், விவசாய துாராக நீடிக்க முடியாது.
கர்நாடகாவில் மூன்று துணை முதல்வர்களை நியமிப்பது தொடர்பாக அமைச்சர் ராஜண்ணா பேசியதை கட்சி மேடையில் விவாதிப்போம். அங்கே எங்கள் கருத்தை தெரிவிப்போம்.
அனைவரும் முதல்வராக வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால், கட்சி தலைவர்கள் முடிவு செய்வர். முதல்வராக பதவியேற்க, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. அந்த கேள்விக்கு இப்போது அவசியம் இல்லை. முதல்வர் பதவி காலியாக இல்லை.
லோக்சபா தேர்தலை அனைவரும் தீவிரமாக எதிர்கொண்டனர். பின்னடைவு குறித்து சிந்திப்போம். வாக்குறுதி திட்டங்கள் குறித்தும் ஆலோசிப்போம்.
மஹாராஷ்டிராவில் கவிழும் ஆட்சியை முதலில் பா.ஜ., பார்த்து கொள்ளட்டும். கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க அவர்களுக்கு 60 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. பா.ஜ.,வை எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் ஆதரிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

