sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

இந்தியா

/

சித்தராமையா அரசுக்கு 'வேட்டு' வைத்த தர்ஷன்; பரப்பன அக்ரஹாரா சிறையில் நடப்பது என்ன?

ADDED : ஆக 27, 2024 05:15 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:15 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேள்விகள் இங்கே... பதில் எங்கே?

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி நடிகர் தர்ஷன் சிறைக்குச் சென்றபோதே, அமைச்சர்கள் யாரும் தலையிட வேண்டாமென சித்தராமையா கடுமையாக உத்தரவிட்ட பிறகும், அவருக்கு சிறையில் சலுகை காட்டப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் சி.சி.பி.,க்கும், உளவுத்துறைக்கும் தெரியாமல் இத்தனை சலுகைகளை அதிகாரிகளால் கொடுத்துவிட முடியுமா? என்பதே சாமானியனின் கேள்வி.தர்ஷன் படமும், வீடியோவும் வெளியான பின், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த நிலையில் சாமானிய மக்கள் எழுப்பும் கேள்விகள் வருமாறு:1நடிகர் தர்ஷனுக்கு சலுகைகள் காட்டிய விவகாரத்தில் எவ்வளவு பணம் கைமாறியது?2காங்கிரஸ் அமைச்சர்கள் வரை தொடர்பு நீளவில்லை என்பது எந்த அளவு உண்மை?3நடிகர் தர்ஷனைப் போல வேறு யாரிடமெல்லாம் பணம் வாங்கிக் கொண்டு சிறையில் ராஜ உபசாரம் வழங்கப்படுகிறது?424ம் தேதி சி.சி.பி., போலீசார் நடத்திய, 'ரெய்டு' கண்துடைப்பா அல்லது முன்கூட்டியே ரெய்டு குறித்த தகவல் சிறைத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு கண் துடைப்பாக நடத்தப்பட்டதா?5மாநிலத்தின் பெரும்பாலான மத்திய சிறைகளிலும் இதே அளவு சட்டவிரோத மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் நடமாட்டம் இருப்பதாக புகார் உள்ள நிலையில், தர்ஷன் உள்ளிட்டோர் மாற்றப்படும் வேறு சிறையிலும் இதே சலுகைகள் கிடைக்காது என்று உத்தரவாதம் அளிக்க அரசு முன்வருமா?

அரசு போடும் சட்டங்களெல்லாம் சாமானியர்களை கட்டுப்படுத்தத்தான். அரசியல்வாதிகளுக்கும், பணம் படைத்தவர்களும் அந்த சட்டம் வளைந்து கொடுக்கும் என்ற சாமானிய மக்களின் புலம்பல் உண்மை என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் போகிற போக்கில் கொளுத்திப் போட்ட வெடி, இப்படி எல்லாம் வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

வாய்மொழி உத்தரவு

வழக்கு ஒன்றில், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் தன் கட்சிக்காரருக்காக ஆஜரான வக்கீல் ஒருவர், 'பரப்பன அக்ரஹாரா சிறையில் சட்டவிரோத மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் நடமாட்டம் இருக்கிறது.

ஆனால் வீட்டு உணவு வழங்க என் கட்சிக்காரருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது' என, 'வெடிகுண்டு' குற்றச்சாட்டை வீசினார்.

'சிறைக்குள் வெற்றிலை, பாக்கு பரிமாறப்படுவது' உள்ளிட்ட சமாச்சாரங்கள் அன்று உயர் நீதிமன்ற சுவர்களில் பட்டு எதிரொலித்தன.

இந்த குற்றச்சாட்டை மின்னஞ்சல் வழியே எழுப்பியபோதே, சம்பந்தப்பட்ட கைதி தனி சிறையில் அடைக்கப்பட்டதாக நீதிபதியிடம் முறையிடப்பட்டது. எல்லாவற்றையும் கேட்ட உயர் நீதிமன்றமும் சிறையில் சோதனை நடத்துங்கள் என, ஒரு வாய்மொழி உத்தரவை பிறப்பித்தது.

உயர் நீதிமன்றத்தில் முந்தைய காட்சி ஆக., 21ல் நடந்தது. இந்த வழக்கு அடுத்த மாதம் 5ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதற்குள் எல்லாம் சரியாக இருக்கிறது என்பதாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதி, வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தாலும் அதை நிறைவேற்றி, சட்டத்தின் முன் அனைத்துமே சரியாக இருப்பதாக காட்சியை அரங்கேற்றும் பொறுப்பு, தனக்கு உள்ளது என்பதை அரசு செய்து காட்டியது.

அதாவது, 24ம் தேதி காலையில், அதிரடியாக சி.சி.பி., போலீசார், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்குள் நுழைந்தார்களாம்.

டுவிஸ்ட்

அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினார்களாம். தடை செய்யப்பட்ட பொருள் ஒன்று கூட கிடைக்கவில்லையாம். இதைத்தான் அன்று மாலை அதிகாரப்பூர்வமாக நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா அறிவித்தார்.

செப்டம்பர் 5ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மேற்படி வழக்கு விசாரணைக்கு வரும்போது, 'எல்லாம் சரியாக உள்ளது, வழக்கறிஞர் சொன்னது பொய்' என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசு தரப்புக்கு ஏற்பட்டது.

சிறைக்குள் சட்டவிரோத பொருட்கள் நடமாட்டம் இருப்பதை ஒப்புக்கொள்ள அரசு தரப்பு தயாராக இல்லை. இதுவரை எல்லாம் 'யாரோ' திட்டமிட்டபடி சரியாக நடந்தது. அடுத்து நடந்தவை தான், 'டுவிஸ்ட்'.

யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து படமும், வீடியோவும் வெளியாக அரசு தரப்பு மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.

அது, கொலை வழக்கில் கைதாகி அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன், பிரபல ரவுடிகளான வில்சன் கார்டன் நாகா, குல்லா சீனா ஆகியோருடன், நாற்காலியில் அமர்ந்து ஒரு கையில் டீ கப்.

இன்னொரு கையில், சிகரெட்டுடன் இருக்கும் படமும், ஒருவருடன் நடிகர் தர்ஷன் 'வீடியோ கால்' பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி, அரசு தரப்புக்கு, 'வேட்டு' வைத்துள்ளது.

சிக்கல்

செப்., 5ம் தேதி மேற்கண்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது சமாளித்துவிடலாம் என்று கணக்கு போட்டிருந்த அரசு தரப்புக்கு, நடிகர் தர்ஷன் விவகாரம், நிலைமையை சிக்கலாக்கி இருக்கிறது.

முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசுக்கு நடிகர் தர்ஷன் வைத்த, 'வேட்டு' வெடிக்குமா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

கேள்விகள் இங்கே... பதில் எங்கே?

ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி நடிகர் தர்ஷன் சிறைக்குச் சென்றபோதே, அமைச்சர்கள் யாரும் தலையிட வேண்டாமென சித்தராமையா கடுமையாக உத்தரவிட்ட பிறகும், அவருக்கு சிறையில் சலுகை காட்டப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் சி.சி.பி.,க்கும், உளவுத்துறைக்கும் தெரியாமல் இத்தனை சலுகைகளை அதிகாரிகளால் கொடுத்துவிட முடியுமா? என்பதே சாமானியனின் கேள்வி.தர்ஷன் படமும், வீடியோவும் வெளியான பின், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த நிலையில் சாமானிய மக்கள் எழுப்பும் கேள்விகள் வருமாறு:1நடிகர் தர்ஷனுக்கு சலுகைகள் காட்டிய விவகாரத்தில் எவ்வளவு பணம் கைமாறியது?2காங்கிரஸ் அமைச்சர்கள் வரை தொடர்பு நீளவில்லை என்பது எந்த அளவு உண்மை?3நடிகர் தர்ஷனைப் போல வேறு யாரிடமெல்லாம் பணம் வாங்கிக் கொண்டு சிறையில் ராஜ உபசாரம் வழங்கப்படுகிறது?424ம் தேதி சி.சி.பி., போலீசார் நடத்திய, 'ரெய்டு' கண்துடைப்பா அல்லது முன்கூட்டியே ரெய்டு குறித்த தகவல் சிறைத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு கண் துடைப்பாக நடத்தப்பட்டதா?5மாநிலத்தின் பெரும்பாலான மத்திய சிறைகளிலும் இதே அளவு சட்டவிரோத மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் நடமாட்டம் இருப்பதாக புகார் உள்ள நிலையில், தர்ஷன் உள்ளிட்டோர் மாற்றப்படும் வேறு சிறையிலும் இதே சலுகைகள் கிடைக்காது என்று உத்தரவாதம் அளிக்க அரசு முன்வருமா?

- நமது நிருபர் -

      Dinamalar
      Follow us