ADDED : மே 23, 2024 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி: கடன் தொல்லையால், விரக்தி அடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
பெலகாவி, ஹுக்கேரியை சேர்ந்தவர் சாந்திநாத சுரேஷ் கேஸ்தி, 27. இவர் வாகனங்கள் பழுது பார்க்கும் கேரேஜ் நடத்தி வந்தார். தொழிலுக்காக பல இடங்களில் கடன் வாங்கினார். இதை அடைக்க முடியாமல் அவதிப்பட்டார்.
மற்றொரு பக்கம் திருமணம் செய்து கொள்ள, பல ஆண்டுகளாக பெண் தேடியும் கிடைக்கவில்லை. கடன் தொல்லை, திருமணமாகாத ஏக்கம் போன்ற காரணங்களால் மன அழுத்தத்துக்கு ஆளானார்.
நேற்று முன்தினம், அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹுக்கேரி போலீசார் விசாரிக்கின்றனர்.