ADDED : ஏப் 08, 2024 04:46 AM
பெங்களூரு: பெங்களூரில் அதிகளவில் தண்ணீர் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் வினியோகத்தை குறைக்க, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது.
கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, பெங்களூரில் நாள் ஒன்றுக்கு 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
தற்போது நகரின் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் புதிய யோசனையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 2 கோடி லிட்டர் வரை உபயோகிப்பவர்கள்; 40 லட்சம் முதல் 2 கோடி லிட்டர் வரை உபயோகிப்பவர்கள்; 20 லட்சம் முதல் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் உபயோகிப்பவர்கள் பகுதிகளில், வினியோகிக்கும் தண்ணீர் அளவை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களிடம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
முதல்கட்டமாக, அதிக தண்ணீர் உபயோகிப்போருக்கு இம்மாதம் முதல் 10 சதவீத தண்ணீர் வினியோகம் குறைக்கப்படும்.
'நிலைமையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என அதிகாரிகள்தெரிவித்தனர்.

