டில்லி மருத்துவமனையில் தீ விபத்து: ஆறு குழந்தைகள் பலி
டில்லி மருத்துவமனையில் தீ விபத்து: ஆறு குழந்தைகள் பலி
UPDATED : மே 26, 2024 05:43 PM
ADDED : மே 26, 2024 07:59 AM

புதுடில்லி: டில்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் நேற்று இரவு(மே 25) ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பிறந்த குழந்தைகள் உயிரிழந்தனர். ஐந்து குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குழந்தை வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறது.
தீயணைப்பு அதிகாரிகள் கூறியதாவது: தீ விபத்து நிகழ்ந்த குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து 12 குழந்தைகளை மீட்கப்பட்டநிலையில் ஆறு குழந்தைகள் இறந்து விட்டனர். ஆறு குழந்தைகள் டில்லி அட்வான்ஸ் என்.ஐ.சி.யூ மருத்துவனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 16 தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தன. மருத்துவமனை அருகேயுள்ள மற்றொரு கட்டிடமும் தீயில் எரிந்து சேதமடைந்தது. அக்கட்டிடத்தில் இருந்து 12 பேர் மீட்கப்பட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.