வெப்பம் அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை வழிகாட்டுதல்
வெப்பம் அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை வழிகாட்டுதல்
ADDED : மார் 29, 2024 06:37 AM
பெங்களூரு: கர்நாடகாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், தற்காப்பு வழிமுறைகளை சுகாதாரம், குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:
மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் மக்களின் உடல் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. மக்கள் வெப்பத்தில் இருந்து, தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.
உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது அவசியம். நீர்ச்சத்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் அருந்துங்கள். மோர் அல்லது இளநீர், பழரசம் அதிகம் குடித்தால் உடல் சோர்வை தவிர்க்கலாம். நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது நல்லது.
தளர்வான உடைகளை அணிய வேண்டும். வெளிர் நிறத்தில் பருத்தி உடை அணியலாம். காற்று புகக்கூடிய காலணி அணியுங்கள்.
வெளியே செல்லும்போது, கறுப்பு நிற கண்ணாடி அணிவது அவசியம். குடை அல்லது ஸ்கார்ப் பயன்படுத்த வேண்டும். ரேடியோ, தூர்தர்ஷன் அல்லது நாளிதழ்களில் உள்ளூர் வெப்ப நிலை பற்றிய தகவலை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

