சாலையில் குப்பை கொட்டினால் அபராதம் துணை முதல்வர் சிவகுமார் எச்சரிக்கை
சாலையில் குப்பை கொட்டினால் அபராதம் துணை முதல்வர் சிவகுமார் எச்சரிக்கை
ADDED : ஜூலை 10, 2024 04:33 AM

பெங்களூரு : பெங்களூரில் நேற்று துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
பெங்களூரில் டெங்கு அதிகரிக்கிறது. மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. நகரில் பல இடங்களில் குப்பையை கொட்டுகின்றனர். இவர்களை அடையாளம் கண்டு, வழக்குப் பதிவு செய்கிறோம்.
வரும் நாட்களில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து மின் கம்பங்களில், கண்காணிப்பு கேமராக்கள், எல்.இ.டி., பொருத்தப்படும். சாலையில் குப்பை கொட்டியது, யாராக இருந்தாலும் தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். குப்பையால் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது; டெங்கு பரவுகிறது.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு தொடர்பாக, அதிகாரிகள் பத்மநாபன், பரசுராம் ஆடியோ பகிரங்கமானது, என் கவனத்துக்கு வரவில்லை. வழக்கில் நியாயமான விசாரணை நடக்கிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா, ஆணைய தலைவர் பசவராஜ் தத்தல் உட்பட, யாருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இல்லை.
அமைச்சராக இருந்து, விசாரணையை எதிர்கொள்வது சரியாக இருக்காது என்பதால், தன் பதவியை நாகேந்திரா ராஜினாமா செய்துள்ளார். அவருடன் நான் ஆலோசனை நடத்தினேன். விசாரணைக்கு ஆஜராகும்படி, நாகேந்திராவுக்கு எஸ்.ஐ.டி., அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர். நான் யாருடைய விசாரணையிலும் தலையிடமாட்டேன்.
இவ்வாறு அவர்கூறினார்.
''பெங்களூரில் கண்ட, கண்ட இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு நோட்டீஸ் அளித்து, வழக்குப் பதிவு செய்யப்படும்,'' என, பெங்களூரு நகர வளர்ச்சித்துறை அமைச்சரான, துணை முதல்வர் சிவகுமார் எச்சரித்தார்.