தங்கத்தாய் திருத்தல திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
தங்கத்தாய் திருத்தல திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : செப் 06, 2024 06:06 AM
தங்கவயல்: தங்கத்தாய் திருத்தல 49ம் ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தங்கவயல், உரிகம் பகுதியில் உள்ள தங்கத் தாய் திருத்தல் பெருவிழாவை முன்னிட்டு இன்று மாலை 5:15 மணிக்கு மாதாவின் கொடியை, தங்கவயல் வட்டார முதன்மை குரு ஜெரோம் ஸ்தனிஸ்லாஸ் ஏற்றிவைக்கிறார். அதனை தொடர்ந்து, ஜெபமாலை, நவநாள் பிரார்த்தனை, திருப்பலி நடக்கிறது.
இது போல ஒன்பது நாட்களும் மாலை 5:15 மணிக்கு ஜெபமாலை, நவநாள் பிரார்த்தனை, திருப்பலி நடக்கிறது.
அருட் பணியாளர்கள் குடியாத்தம் ஆல்டோவியஸ், தங்கவயல் கில்பர்ட் ராஜ், பங்கார்பேட்டை ஜான் சுதீப், தங்கவயல் சேவியர் தங்கராஜ், பெங்களூரு ஆரோக்கிய நாதன், அமர் நாத் தினேஷ், லுாயிஸ் வேத குமார், கிறிஸ்டி ராஜ் ஐசக், கேப்ரியல் கிறிஸ்டி, சூசை ராஜ், டோம்னிக் சேவியர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இம்மாதம் 15ம் தேதியன்று தேர்பவனி நடக்கிறது. அன்று காலை 6:00, 7:00, 8:30, 10:00, 12:00, 2:00 மணிக்கு திருப்பலியும், மாலை 4:30 மணிக்கு கூட்டு திருப்பலி.
பொன் விழா துவக்க நிகழ்வு, பெங்களூரு உயர் மறைமாவட்ட துணை பேராயர் ஜோசப் சூசை நாதன், அலங்கரிக்கப்பட்ட மாதாவின் தேர்பவனியை துவக்கி, திவ்யநற்கருணை வழங்குகிறார்.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயகரன், அருட்சகோதரிகள், பங்குமக்கள், அன்பியங்கள் செய்தனர்.