தார்வாடில் 14, 15ல் தார்வாடில் 14, 15ல் 'ஸ்கேட்டிங்' போட்டி
தார்வாடில் 14, 15ல் தார்வாடில் 14, 15ல் 'ஸ்கேட்டிங்' போட்டி
ADDED : செப் 13, 2024 08:12 AM

''மாநில அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 14, 15ல் ஹூப்பள்ளியில் நடக்கிறது,'' என கர்நாடக ரூலர் ஸ்கேட்டிங் சங்க தலைவர் மல்லிகார்ஜுன் தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் அவர் கூறியதாவது:
கர்நாடகா ரூலர் ஸ்கேட்டிங் சங்கம், தார்வாட் மாவட்ட ஸ்கேட்டிங் சங்கம் இணைந்து வரும் 14, 15ம் தேதிகளில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியை நடத்துகிறது.
ஹூப்பள்ளி நகரில் ஹனுமன் கோவில் அருகில் உள்ள தத்தா பிராப்பர்ட்டீசில் இப்போட்டி நடக்க உள்ளது.
போட்டியை, மாவட்ட ஸ்கேட்டிங் தலைவர் சீதாராம் துவக்கி வைக்கிறார்.
மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மாவட்ட பொறுப்பு அமைச்சர் சந்தோஷ் லாட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
தார்வாடில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடப்பது, இதுவே முதன் முறை. இப்போட்டியில் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 400 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.
ஒவ்வொரு வீரர்களுக்கும் 700 ரூபாய் நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இன்லைன் மற்றும் குவாட் என இரு பிரிவுகளில் போட்டி நடத்தப்படும்.
ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்கலாம். சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் என பலரும் பங்கேற்கலாம். 200 மீட்டர் முதல் 10,000 மீட்டர் துாரம் வரை போட்டிகள் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட சிறுவர் -- சிறுமியர். கோப்பு படம் - நமது நிருபர் -

