ADDED : பிப் 23, 2025 11:56 PM

புதுடில்லி,: தாய்லாந்தில் இருந்து, 6 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ் கடத்தி வந்த நபர், டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு சமீபத்தில் விமானம் ஒன்று வந்தது.
அதில் வந்த நபர் ஒருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அவரது பையில் இருந்து 40 கிராம் எடையிலான வைர நெக்லசை பறிமுதல் செய்தனர்.
அதன் விலை 6.08 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. நெக்லசை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த, 5ம் தேதி இத்தாலியின் மிலன் நகரில் இருந்து வந்த விமான பயணியர் இருவரிடம், 10 கிலோ எடையிலான தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு, 7.08 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது.
தங்க நாணயம் கடத்திய இருவரும் ஜம்மு - காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

