ADDED : செப் 02, 2024 09:17 PM
பெங்களூரு: பெங்களூரில் மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்று, மற்ற ரயில் நிலையங்களிலும், 'கியூஆர் கோட்' முறையில் டிக்கெட் வாங்க வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், நாட்டின் ஒவ்வொரு துறையிலும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரிக்கிறது. பணம் செலுத்துவோர் எண்ணிக்கை குறைவு. மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்று, மற்ற ரயில் நிலையங்களிலும் கியூஆர் கோட் முறையில் டிக்கெட் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு ரயில்வே பிரிவுக்கு உட்பட்ட கே.எஸ்.ஆர்., ரயில் நிலையம், யஷ்வந்த்பூர் ரயில் நிலையம், கன்டோன்மென்ட் என, 108 ரயில் நிலையங்களிலும், கியூஆர் கோட் வசதி செய்யப்பட்டுள்ளது.
பயணியர் டிக்கெட் வாங்க, மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியது இல்லை. டிக்கெட் கவுன்டரில் சில்லறை பிரச்னையும் இருக்காது. கியூஆர் கோட் மூலமாக பணம் செலுத்தி, டிக்கெட் பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.