sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தில்... திகிலுடன் ஓட்டு போட்ட பிரபலங்கள்

/

தில்... திகிலுடன் ஓட்டு போட்ட பிரபலங்கள்

தில்... திகிலுடன் ஓட்டு போட்ட பிரபலங்கள்

தில்... திகிலுடன் ஓட்டு போட்ட பிரபலங்கள்


ADDED : ஏப் 27, 2024 05:49 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாய் குளறிய முதல்வர்

மைசூரு சித்தராமனஹுண்டி அரசு பள்ளியில், முதல்வர் சித்தராமையா, அவரது மகன் யதீந்திரா ஆகியோர் ஓட்டுப் பதிவு செய்தனர்.

பின், நிருபர்களிடம் முதல்வர் கூறியதாவது:

மைசூரு, சாம்ராஜ்நகர், மாண்டியா, ஹாசன் உட்பட முதல் கட்ட தேர்தல் நடந்த பல தொகுதிகளில் காங்கிரஸ் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

வாக்குறுதித் திட்டங்களுக்கு மக்களுக்கு ஆதரவு தந்துள்ளனர் என்ற நம்பிக்கை உள்ளது. மாநிலத்தின், 20 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் கூறும் போது, 'தேசிய அளவில் முதல் கட்ட தேர்தல் நடந்த 102 தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்' என்றார். உடன் இருந்தவர்கள் திருத்திய பின், 'இண்டியா கூட்டணி' என்று கூறினார்.

***

27_DCM DKS

கனகபுராவின் தொட்டஹாலஹள்ளி ஓட்டுச்சாவடியில், துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷ் ஓட்டுப்பதிவு செய்தனர்.

*

குமாரசாமியை குரங்குடன்

ஒப்பிட்ட சிவகுமார்

கனகபுராவின் தொட்டஹாலஹள்ளி ஓட்டுச்சாவடியில், துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷ் ஓட்டுப்பதிவு செய்தனர்.

பின், துணை முதல்வர் கூறியதாவது:

ஜனநாயக திருவிழா நடக்கிறது. எங்கள் ஊரிலும் திருவிழா நடக்கிறது. என்னை எட்டு முறை சட்டசபைக்கு அனுப்பினர். சுரேஷையும், மூன்று முறை பார்லிமென்டுக்கு அனுப்பினர். நாங்கள் அளித்த வாக்குறுதிக்கு, மக்கள் ஆர்வத்துடன் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். அதிக ஓட்டு வித்தியாசத்தில் என் தம்பி வெற்றி பெறுவார்.

குரங்கு போன்று, குமாரசாமி தான் சாப்பிட்டு விட்டு, மற்றவர்கள் முகத்தில் தடவுவார். அது போன்று அவர் பணத்தை பட்டுவாடா செய்துவிட்டு, எங்கள் மீது குற்றஞ்சாட்டுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

***

படம்: 27_HDK Anitha

பிடதி கேதிகானஹள்ளி ஓட்டுச்சாவடியில், முன்னாள் முதல்வர் குமாரசாமி, தன் மனைவி அனிதா, மகன் நிகில், மருமகளுடன் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.

*

கோழைத்தன அரசியல்

செய்யும் சிவகுமார்

பிடதி கேதிகானஹள்ளி ஓட்டுச்சாவடியில், முன்னாள் முதல்வர் குமாரசாமி, தன் மனைவி அனிதா, மகன் நிகில், மருமகளுடன் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.

பின், குமாரசாமி கூறியதாவது:

சிவகுமார் போன்று கோழை நான் அல்ல. நான் நேரடியாக அரசியல் செய்பவன். கோழைத்தனமான அரசியல் அவர் தான் செய்கிறார்.

இரவோடு, இரவாக திருட்டுத்தனமாக, கியூ.ஆர்., கோட் கூப்பன்களை வாக்காளர்களுக்கு வழங்கியவர் அவர். பல முறை புகார் அளித்தும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதை விட, பணம், பரிசுப்பொருட்கள் வழங்கலாம் என்ற நடைமுறையை கொண்டு வாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

***

படம்: 27_Javagal Srinath

மைசூரு ஞானகங்கா பி.யு., கல்லுாரி ஓட்டுச்சாவடியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் ஓட்டுப்பதிவு செய்தார்.

*

நாட்டின் வளர்ச்சிக்கு

கை கோர்க்க வேண்டும்

மைசூரு ஞானகங்கா பி.யு., கல்லுாரி ஓட்டுச்சாவடியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் ஓட்டுப்பதிவு செய்தார்.

பின், அவர் கூறியதாவது:

மைசூரு லோக்சபா தேர்தல் துாதராக மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். எனது உரிமையை நான் சரியாக செய்துள்ளேன்.

ஒவ்வொருவரும் அவரவர் உரிமையை மறக்காமல் செய்ய வேண்டும். உங்கள் தலைவரை நீங்களே தேர்வு செய்யும் நேரம் இது.

இளம் வாக்காளர்கள் சிந்தித்து ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு கை கோர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

***

படம்: 27_Nirmala Sheetharaman

ஜெயநகர் பி.இ.எஸ்., கல்லுாரி ஓட்டுச்சாவடியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓட்டுப்பதிவு செய்தார்.

*

நிலையான ஆட்சி

மக்கள் விருப்பம்

பின், மத்திய அமைச்சர் கூறியதாவது:

மக்கள் நிலையான ஆட்சியை விரும்புகின்றனர். வளர்ச்சி இந்தியாவை கான விரும்புகின்றனர். 10 ஆண்டுகள் மத்திய அரசு செய்த சாதனைகள், மக்கள் மனதில் உள்ளன.

இளம் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஓட்டு போடுவதை பார்க்க முடிகிறது. வீட்டிலேயே ஓட்டு போட வாய்ப்பு அளித்தும், மூத்த குடிமக்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்துள்ளது மகிழ்ச்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

***

படம்: 27_Ramesh Aravind

நடிகர் ரமேஷ் அரவிந்த், மனைவியுடன் வந்து ஓட்டுப்பதிவு செய்தார்.

*

ஓட்டு போடுவது சமூக பொறுப்பு

பனசங்கரியில், பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த் ஓட்டுப்பதிவு செய்த பின், கூறியதாவது:

யார் வெற்றி பெறுவார் என்பது இரண்டாவது விஷயம். முதலில், நாம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். இது ஒவ்வொருவரின் சமூக பொறுப்பு.

ஒரு குடும்பம் ஓட்டு போடா விட்டாலும், நிறைய வித்தியாசம் இருக்கும். ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், இறுதி கட்டத்தில் வெற்றி பெற்றது போல், இறுதி நேரத்தில் வாக்காளர்கள் அதிகமாக வரலாம்.

நமது மிக பெரிய பொறுப்பை, அனைவரும் செய்ய வேண்டும். பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். இளைஞர்கள் பல கனவு காண்கின்றனர். இதற்கு முதல் படி, ஓட்டு போட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

***

படம்: 27_Actor Sudeep

ஓட்டுப்பதிவு செய்த நடிகர் சுதீப்.

*

பொறுப்புள்ளோர்

ஓட்டு போடுவர்

புட்டேனஹள்ளி ஆக்ஸ்போர்ட் ஆங்கில பள்ளியில் நடிகர் சுதீப் ஓட்டுப்பதிவு செய்த பின், கூறியதாவது:

நாட்டின் நலன் மீதும், மாநிலத்தின் மீது அன்பு கொண்டவர்கள், ஓட்டு போடுவர். எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஓட்டு போட வராதவர்களை எதுவும் சொல்ல முடியாது.

ஓட்டு போட்டவர்களுக்கும், ஓட்டு போடாதவர்களுக்கும் நல்லது நடக்கும். பொறுப்பு இருப்பவர்கள் ஓட்டு போடுவர்.

யார் ஓட்டு போடவில்லையோ, அவர்களை பற்றி கவலைப்படாமல், பொறுப்பை சரியாக செய்தவர்கள் பற்றி யோசிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

***

படம்: 27_Actor Upendra

கத்ரிகுப்பே ஓட்டுச்சாவடியில் நடிகர் உபேந்திரா ஓட்டுப்பதிவு செய்தார்.

*

ஜனநாயக நடைமுறையில்

நாம் தான் மன்னர்கள்

கத்ரிகுப்பே ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்த பின், நடிகர் உபேந்திரா கூறியதாவது:

ஓட்டு சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பம். ஆனால், சிலர் ஓட்டு போடுவது இல்லை. கட்டாயமாக ஓட்டு போட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர்.

அப்படிசெய்தால், ஜனநாயகத்துக்கு பதில், சர்வாதிகாரம் ஆகிவிடும். ஜனநாயகத்தில் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. சிலருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை.

கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் என்று சொல்ல முடியாது. ஓட்டு போட்டால் நல்லது. ஏனென்றால் வாக்காளர்கள், தங்களை மன்னர்கள் போன்று நினைக்கும் நாள் இது.

ஜனநாயக நடைமுறையில் இன்று ஒரு நாள் நாம் தான் மன்னர்கள். இந்த வாய்ப்பை விட்டு விட கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

***

படம்: 27_Infosys Narayanamurthy

ஜெயநகர் பி.இ.எஸ்., கல்லுாரியில், இன்போசிஸ் நிறுவன நிறுவனர் நாராயணமூர்த்தி, அவரது மனைவி சுதாமூர்த்தி ஓட்டுப்பதிவு செய்தனர்.

*

உங்கள் தலைவரை

நீங்களே தேர்வு செய்யுங்க!

இன்போசிஸ் நிறுவன நிறுவனர் நாராயணமூர்த்தி, அவரது மனைவி சுதாமூர்த்தி ஜெயநகர் பி.இ.எஸ்., கல்லுாரியில், ஓட்டுப்பதிவு செய்தனர்.

பின், சுதாமூர்த்தி, கூறியதாவது:

வீட்டில் அமர கூடாது. வெளியே வந்து ஓட்டு போட வேண்டும். உங்கள் தலைவரை, நீங்களே தேர்வு செய்யுங்கள். கிராமப்புறங்களை ஒப்பிடும்போது, நகர பகுதிகளில் குறைவான ஓட்டுப்பதிவு நடக்கிறது. இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டு போட வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

***

படம்: 27_Ashwini Punith

சதாசிவநகர் பூர்ணபிரக்ஞா பள்ளியில் ஓட்டுப்பதிவு செய்த நடிகர் ராகவேந்திரா, தயாரிப்பாளர் அஸ்வினி புனித்ராஜ்குமார்.

*

நாட்டின் நலன்

மிகவும் முக்கியம்

நடிகர் ராகவேந்திரா, தயாரிப்பாளர் அஸ்வினி புனித்ராஜ்குமார், வினோத்ராஜ்குமார் ஆகியோர் சதாசிவநகரில் உள்ள பூர்ணபிரக்ஞா பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தனர்.

பின், அஸ்வினி கூறியதாவது:

நாங்கள் ஓட்டு போட்டு விட்டோம். நீங்களும் ஓட்டு போடுங்கள். நமது பொறுப்பை சரியாக செய்ய வேண்டும். நாட்டின் நலன் மிகவும் முக்கியம்.

ஓட்டு போடுவது உரிமை மட்டுமின்றி, கடமையும் கூட. ஒவ்வொருவரும் ஜனநாயக கடமையை சரியாக ஆற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

***

27_Ashok opp leader

ஜாலஹள்ளி கிளாரட் பள்ளி ஓட்டுச்சாவடியில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், மனைவியுடன் வந்து ஓட்டுப்பதிவு செய்தார்.

*

மக்கள் மிகவும் புத்திசாலிகள்

ஜாலஹள்ளி கிளாரட் பள்ளி ஓட்டுச்சாவடியில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், மனைவியுடன் வந்து ஓட்டுப்பதிவு செய்தார்.

பின், அவர் கூறியதாவது:

கர்நாடக மக்கள் அனைவரும், உங்கள் பொன்னான ஓட்டை செலுத்துங்கள். பிரச்னை இருக்கலாம். அதற்காக ஓட்டு போடாமல் இருக்க வேண்டாம். நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் நாள். எனது தாய், 92 வயதிலும் ஓட்டுப்பதிவு செய்துள்ளார்.

ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சியை யார் தருவர். நாட்டின் காவல்காரன் யார் ஆக வேண்டும், உலக தலைவராக யார் வர வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வர். மக்கள் மிகவும் புத்திசாலியாக இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

***






      Dinamalar
      Follow us