தொகுதி மக்களுக்கு விநாயகர் சிலை தினேஷ் குண்டுராவ் வழங்கல்
தொகுதி மக்களுக்கு விநாயகர் சிலை தினேஷ் குண்டுராவ் வழங்கல்
ADDED : செப் 07, 2024 07:43 AM

பெங்களூரு: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தன் தொகுதி மக்களுக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விநாயகர் சிலைகள், பெண்களுக்கு சீர்வரிசையை, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று வழங்கினார்.
பெங்களூரு காந்திநகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காட்டன்பேட்டில் இதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்களுக்கு விநாயகர் சிலைகளையும் பெண்களுக்கு சீர்வரிசையையும் வழங்கி அவர் பேசியதாவது:
மக்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நிவர்த்தி ஆக வேண்டும். அமைதி, நிம்மதி கிடைக்கட்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும். பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பும் முக்கியம்.
மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, பி.ஓ.பி., சிலைகளை தடுக்க முடியும். எனவே மக்கள் மண் சிலைகளை பயன்படுத்த வேண்டும்.
மாநிலத்தில் நல்ல மழை பெய்துள்ளது. சுகாதாரத்துறையில் வியக்கத்தக்க மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.