நக்சல் ஒழிப்பு படை கலைப்பு: பாதிப்பு பகுதிகளுக்கு ரூ.10 கோடி நிதியுதவி
நக்சல் ஒழிப்பு படை கலைப்பு: பாதிப்பு பகுதிகளுக்கு ரூ.10 கோடி நிதியுதவி
ADDED : மார் 08, 2025 02:14 AM

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் சட்டம் - ஒழுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொடர்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்போருக்கு எதிராக 'பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கை' நடவடிக்கை
பெண்கள் மத்தியில் பொது பாதுகாப்பு உணர்வை வளர்க்கவும், குற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு உடனடி காவல் உதவி வழங்க, பெங்களூரு நகரில் 60 மகளிர் புற போலீஸ் நிலையங்கள்
மொத்தம் 30 கோடி ரூபாயில், 12 போலீஸ் நிலையங்கள், ஒரு துணை பிரிவு அலுவலகம், இரண்டு வட்ட அலுவலகங்கள், ஒரு போலீஸ் நிலைய கட்டடம் கட்டப்படும்
தடய அறிவியல் ஆய்வகங்களில் இருந்து அறிக்கை பெறும் காலம், ஆறு மாதங்களாக குறைக்கப்படும்
போலீஸ் துறை மொபிலிட்டி திட்டத்தின் கீழ், 1,000 புதிய வாகனங்கள் வாங்க, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு
'நக்சல் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டக் குழு' முன் ஆறு நக்சல்கள் சரணடைந்ததன் மூலம், கர்நாடகா நக்சல்கள் இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. எனவே நக்சல் ஒழிப்பு படை கலைக்கப்படும். நக்சல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க, சைபர் கிரைம் பிரிவுக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு
நந்தி ஹில்ஸ் அருகே உள்ள குடுகுர்கி மற்றும் கே.ஜி.எப்.,-பில் இரண்டு இந்திய ரிசர்வ் பட்டாலியன்கள் நிறுவ, 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு
'போலீஸ் கிருஹா - -2025' திட்டத்தின் கீழ், 2025 - -26ல், 300 கோடி ரூபாய் மதிப்பில் குடியிருப்பு கட்டுமான பணிகள் துவங்கப்படும்
போலீஸ் துறையை பலப்படுத்த பெங்களூரு நகரில், போலீஸ் மண்டலங்களின் எண்ணிக்கை எட்டிலிருந்து 11 ஆக அதிகரிப்பு
மாநிலத்தில் இந்தாண்டு பல்லாரி, தாவணகெரே, மைசூரு, பெங்களூரு மத்திய மண்டலங்களில், மேலும் நான்கு வெடிகுண்டு கண்டறிதல், செயலிழக்க செய்யும் குழுக்கள் அமைக்கப்படும்
போலீசார் உடல் தகுதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த சுகாதார பரிசோதனைக்கான தொகை, 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்வு
போலீஸ் அதிகாரிகள், பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவுப் படி, 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்வு
பணியின் போது அல்லது பயிற்சியின் போது ஊர்காவல் படையினர், சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணை தொகை, 5 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்
சிறைத்துறையின் கீழ் அடிப்படை உள்கட்டமைப்பு மேம்படுத்த, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறைக்கு, உபகரணங்கள் கொள்முதல் செய்ய, புதிய கட்டடங்கள் கட்ட, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு
உயரமான கட்டடங்களில் ஏற்படும் தீயை அணைக்க, 5,2-54 மீட்டர் உயரத்தை எட்டும் திறன் கொண்ட 'ஏரியல் லேடர் பிளாட்பார்ம்' வாகனம் வழங்கப்படும்
மைசூரு நகரில் 3 கோடி ரூபாயில் புதிய தீயணைப்பு நிலைய கட்டடம் கட்டப்படும்.