பேரிடர் மேலாண்மை நிதியை பாரபட்சமின்றி வழங்கணும்; கார்கே வலியுறுத்தல்
பேரிடர் மேலாண்மை நிதியை பாரபட்சமின்றி வழங்கணும்; கார்கே வலியுறுத்தல்
ADDED : ஆக 02, 2024 03:21 PM

புதுடில்லி: 'பேரிடர் மேலாண்மை நிதியை பாரபட்சமின்றி மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
கேரளாவில் வயநாட்டில் நிலச்சரிவுகளில் சிக்கி, இதுவரை 308 பேர் உயிரிழந்தனர். டில்லி, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்டில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில்,பேரிடர் மேலாண்மை நிதியை பாரபட்சமின்றி மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
நிதி வழங்குங்கள்!
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: காலநிலை மாற்றம் காரணமாக, நிலச்சரிவு, வேகவெடிப்பு , கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி பேரிடர் மேலாண்மை நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மேக வெடிப்பு மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில், மக்களுடன் நாங்கள் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.