ADDED : மார் 29, 2024 06:38 AM

யாத்கிர் : குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், கல்லுாரி மாணவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
யாத்கிர் டவுனில் வசித்தவர் நந்தகுமார் ஹட்டிமணி, 21. கல்லுாரி மாணவர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஹனுமவ்வா, 45. இவர், நந்தகுமாருக்கு உறவுமுறையில் அத்தை ஆவார்.
நேற்று காலை வீட்டின் முன் உள்ள, குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக, ஹனுமவ்வாவுக்கும், நந்தகுமாரின் பாட்டிக்கும் தகராறு ஏற்பட்டது.
அங்கு வந்த நந்தகுமார், ஹனுமவ்வாவை தட்டிக் கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ஹனுமவ்வாவின் மகன் ஹனுமந்தா, 22, நந்தகுமாரிடம் தகராறு செய்தார்.
வீட்டிற்குள் சென்று, கத்தியை எடுத்து வந்து, நந்தகுமாரை, ஹனுமந்தா குத்தினார். பலத்த கத்திக்குத்து காயம் அடைந்தவர், பரிதாபமாக இறந்தார். ஹனுமவ்வா, ஹனுமந்தா கைது செய்யப்பட்டனர்.

