ADDED : மே 06, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பதி: திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்னையை சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிப்பர் லாரியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலுக்கு, சென்னையை சேர்ந்த அசோக் லேலண்ட் என்ற ஆட்டோ மொபைல் நிறுவனம், ஆண்டு தோறும் வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கி வருகிறது. இந்நிலையில், திருப்பதியில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், அசோக் லேலண்ட் நிறுவனம், 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிப்பர் லாரியை நன்கொடையாக வழங்கியது.
இந்த வாகனத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா கோவில் நிர்வாகியிடம் அசோக் லேலண்ட் நிறுவன அதிகாரி வழங்கினார் என்று கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.