என்னை தேடி வர வேண்டாம்: சிவகுமார் அதிரடி அறிவிப்பு
என்னை தேடி வர வேண்டாம்: சிவகுமார் அதிரடி அறிவிப்பு
ADDED : ஆக 08, 2024 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு ; ராம்நகரின், கனகபுரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான சிவகுமார், தற்போது துணை முதல்வராக பதவி வகிக்கிறார். தொகுதி மக்கள், தங்களின் பிரச்னைகளை கூற, அவ்வப்போது இவரை சந்திக்க பெங்களூருக்கு வருகின்றனர். இவர்கள் பணம் செலவிட்டு, தன்னை பார்க்க வருவதால் சிவகுமார் வருத்தம் அடைந்துள்ளார்.
இனி மாதந்தோறும், இரண்டாவது, மூன்றாவது சனிக்கிழமைகளில் கனகபுராவுக்கு செல்வார். அன்றைய நாட்களில் மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிய முடிவு செய்துள்ளார்.
எனவே, 'மக்கள் என்னை சந்திக்க, அவதிப்பட்டு பெங்களூருக்கு வர வேண்டாம். நானே கனகபுராவுக்கு வந்து, உங்களின் கஷ்ட, நஷ்டங்களை கேட்டறிவேன்' என, சமூக வலைதளங்களில் சிவகுமார் தெரிவித்துள்ளார்.