தேர்தலில் ஓட்டளிக்காதீர்கள்!: வயநாட்டில் மக்களை மிரட்டிய நக்சலைட்கள்
தேர்தலில் ஓட்டளிக்காதீர்கள்!: வயநாட்டில் மக்களை மிரட்டிய நக்சலைட்கள்
UPDATED : ஏப் 24, 2024 05:52 PM
ADDED : ஏப் 24, 2024 10:49 AM

பந்தலூர்: கேரள மாநிலம் வயநாடு அருகே தேர்தலில் ஓட்டளிக்க வேண்டாம் என பொதுமக்களை நக்சலைட்கள் மிரட்டி உள்ளனர்.
கேரளாவில் வரும் ஏப்ரல் 26ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வயநாட்டில் உள்ள கம்பமலை எஸ்டேட் பகுதியில் நக்சலைட்கள் மொய்தீன், சந்தோஷ், சோமன் ஆகியோர் துப்பாக்கிகளுடன் வந்துள்ளனர்.
இங்கு தமிழ் மற்றும் மலையாள மொழி பேசும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களிடம் நக்சலைட்கள், ‛‛ தேர்தலில் ஓட்டளித்து எந்த பயனும் கிடையாது. எனவே தேர்தலை அனைவரும் புறக்கணிக்க வேண்டும். எங்களோடு இணைந்து போராட முன் வர வேண்டும்'' என்றனர்.
இதற்கு தொழிலாளர்கள் அவர்களிடம், ‛‛ மக்களுக்காக வெளிப்படையாக வந்து போராட வேண்டும்'' என கூறினர். அதற்கு ''விரைவில் வருவோம்; அதுவரை காத்திருக்க வேண்டும். தேர்தலில் ஓட்டு போடுவது பயனற்றது'' என்று கூறி விட்டு நக்சலைட்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

