ADDED : ஏப் 20, 2024 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் முற்கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் 100 சதவீதம் பாதுகாப்பானது. தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
பலகட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் அனைத்து கட்டத்திலும் உடன் இருந்துள்ளனர். எல்லாம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையாகவே நடக்கின்றன. எனவே, மக்கள் அளித்த ஓட்டுகள் குறித்து கவலை வேண்டாம். அவை மிகவும் பத்திரமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

