ADDED : ஜூலை 06, 2024 06:24 AM

கங்கமனகுடி: வரதட்சணை கொடுமையால் ஐ.டி., பெண் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரிடம் விசாரணை நடக்கிறது.
விஜயநகராவை சேர்ந்தவர் பூஜா, 22. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு கங்கமனகுடியின் சுனில், 25 என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் கங்கமனகுடியில் தனியாக இருவரும் வசித்தனர். திருமணத்தின் போது சுனிலுக்கு, பூஜாவின் பெற்றோர் நகை, பணம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி, பூஜாவிடம், சுனில் கேட்டுள்ளார்.
அதற்கு பூஜா மறுத்ததால், கணவன், மனைவி இடையில் தினமும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பூஜா நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூஜாவை தற்கொலைக்கு துாண்டியதாக சுனில் மீது, கங்கமனகுடி போலீசில், பூஜாவின் பெற்றோர் புகார் அளித்தனர். சுனிலை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.