ADDED : ஆக 07, 2024 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடுகோடி : ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தருண் சவுத்ரி, 32. பெங்களூரு ஆடுகோடியில் நகை கடை நடத்துகிறார். இவருக்கும் தனிஷா, 32, என்பவருக்கும் கடந்த 2022ல் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. திருமணத்தின் போது தருணுக்கு, தனிஷாவின் குடும்பத்தினர் நகை, பணம், கார் கொடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக, கூடுதல் வரதட்சணை கேட்டு தனிஷாவை, தருண் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால், மனம் உடைந்த தனிஷா, நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், தனிஷாவை கொன்று உடலை துாக்கில் தொங்க விட்டதாக தருண் மீது, மாமனார் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். தருண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.