ADDED : ஜூன் 30, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துமகூரு: பங்கு சந்தையில் முதலீடு செய்து, டாக்டர் 36.40 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.
துமகூரு திப்துார் டவுனில்வசிப்பவர் வித்யாசாகர், 45. டாக்டர். ஏஞ்சலோன் என்ற செயலியை பயன்படுத்தி வந்தார்.அந்த செயலியை பயன்படுத்தி, பங்கு சந்தையில் 36.40 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.பணம் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று நம்பினார்.
ஆனால், அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. பணத்தையும் திரும்ப எடுக்க முடியவில்லை. இதனால் பணத்தை ஏமாந்தது தெரிந்தது. இதுகுறித்து துமகூரு சைபர் கிரைம் போலீசில், வித்யாசாகர் புகார் அளித்து உள்ளார்.