ADDED : பிப் 22, 2025 09:33 PM
பால்ஸ்வா டெய்ரி: போதைப்பொருள் வியாபாரிக்குச் சொந்தமான 1.78 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏழு சொத்துக்களை டில்லி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தஸ்லிமா என்ற புட்டி என்பவரை கடந்த ஆண்டு ஜூனில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 400 கிராம் ஹெராயின் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
தஸ்லிமாவிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு பல்வேறு போதை வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் போதைப் பொருள் கடத்தல், விற்பனையில் கிடைத்த பணத்தில் அவர் சொத்துக்களை வாங்கிக் குவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்று தஸ்லிமாவுக்குச் சொந்தமான ஏழு சொத்துக்களை பறிமுதல் செய்திருப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு 1.78 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

