உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 12, 2024 10:08 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி:தலைநகர் டில்லி மற்றும் புறநகரில் போதைப்பொருள் சப்ளை செய்த டில்லி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கோடி ரூ-பாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் ஒருவர், தன் நண்பருடன் சேர்ந்து டில்லி மற்றும் புறநகரில் போதைப் பொருள் சப்ளை செய்து வந்தார்.
சிறப்புப் பிரிவு போலீசார், ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று முன் தினம் இரவு அதிரடி சோதனை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் வந்த சொகுசு காரில் இருந்து ஒரு கோடி ரூபாய் சர்வதேச சந்தை மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடமும் விசாரணை நடக்கிறது.
