தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ போதையில் சண்டை: 2 பேர் 'சஸ்பெண்ட்' 

போதையில் சண்டை: 2 பேர் 'சஸ்பெண்ட்' 

போதையில் சண்டை: 2 பேர் 'சஸ்பெண்ட்' 


ADDED : ஜூன் 01, 2024 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2024 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துமகூரு, : போதையில் சண்டை போட்ட மின்வாரிய இன்ஜினியர், மெக்கானிக் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.

துமகூரு பாவகடாவில் உள்ள கர்நாடக மின் பகிர்மான வாரிய அலுவலகத்தில், இன்ஜினியர்களாக வேலை செய்யும் வரதராஜ், சீனிவாஸ், கிரேடு - 1 மெக்கானிக் நரசிம்மமூர்த்தி, கிரேடு - 2 மெக்கானிக் சந்தோஷ்.

இவர்கள் 4 பேரும், இரண்டு நாட்களுக்கு முன்பு, பணி நேரத்தில் மது விருந்து நடத்தினர்.

போதை தலைக்கு ஏறியதும், நான்கு பேர் இடையிலும் மோதல் ஏற்பட்டது.

சட்டையை கிழித்து சண்டை போட்டனர். இதை சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலை தளங்களில் வெளியிட்டனர்.

வீடியோ வேகமாக பரவிய நிலையில், வரதராஜ், நரசிம்மமூர்த்தி ஆகிய இருவரும் நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

சீனிவாஸ், சந்தோஷுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us