ADDED : மே 11, 2024 09:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடகாவில் ஒரு வாரமாக மழை பெய்வதால், உற்சாகமடைந்த விவசாயிகள், பயிரிடும் பணிகளை துவக்கி உள்ளனர்.
மைசூரு, ஹாசன், சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு, துமகூரு என, பல்வேறு மாவட்டங்களில் ஒரு வாரமாக நல்ல மழை பெய்துள்ளது. அடுத்து ஒரு வாரம், மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வறட்சியால் அவதிப்பட்ட விவசாயிகள், மழை பெய்வதால் 'குஷி' அடைந்துள்ளனர். நிலத்தை பதப்படுத்தி பயிரிடும் பணிகளை துவக்கியுள்ளனர். நெல், சோளம், துவரம் பருப்பு, எள், கரும்பு உட்பட பல்வேறு தானியங்கள், காய்கறிகள், பழங்களை பயிரிடுகின்றனர்.