தசரா திரைப்பட திருவிழா 72 குறும்படங்கள் விண்ணப்பம்
தசரா திரைப்பட திருவிழா 72 குறும்படங்கள் விண்ணப்பம்
ADDED : செப் 17, 2024 05:53 AM

மைசூரு : தசரா திரைப்பட திருவிழாவுக்காக, தமிழில் நான்கு உட்பட 72 குறும்படங்கள் விண்ணப்பித்துள்ளன.
மைசூரு தசரா விழாவில், ஆண்டுதோறும் திரைப்பட திருவிழா நடக்கும். அந்த வகையில், இந்தாண்டும் திரைப்பட திருவிழா நடத்துவதற்கு, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் குறும்படங்களும் திரையிடப்படும். இதற்காக, கன்னடம் - 63, தமிழ் - 4, கொடவா - 1, ஹிந்தி - 1, லம்பானி - 1, ஊமை படம் - 2 என 72 குறும்படங்கள் விண்ணப்பிக்கப்பட்டன.
இதில், எந்தெந்த குறும்படங்கள் திரைப்பட திருவிழாவுக்கு தேர்வு செய்யலாம் என்பது குறித்து, 'டிவி' சீரியல் நடிகர் சிவாஜிராவ் ஜாதவ், மூத்த திரைப்பட இயக்குனர் ஜனார்த்தன், மைசூரு பல்கலைக்கழக ஊடக பிரிவு முக்கியஸ்தர் சப்னா, நடிகர் பவன் ஆகியோர் நேற்று குறும்படங்களை பார்த்தனர்.
சிறந்த குறும்படங்களுக்கு மதிப்பெண் போட்டனர். தேர்வு செய்யப்படும் குறும்படங்கள், தசரா திரைப்பட திருவிழாவின் போது, மைசூரு ஐனாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும்.
தேர்வு செய்யப்பட்ட விபரத்தை, சஸ்பென்சாக வைத்துள்ளனர். திரைப்பட திருவிழாவின் போது பட்டியல் அறிவிக்கப்பட்ட உள்ளது.