ADDED : மார் 07, 2025 11:14 PM

மாநில, மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் மக்கள் குறைகேட்பு திட்டங்கள் தீர்க்க நடவடிக்கை. பொதுமக்களின் குறைகளை திறம்பட தீர்க்க, 'ஏ.ஐ.,' நடவடிக்கை
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஒப்புதல் மற்றும் வழங்குதல் முறையை, 'கஜானே- - 2'ன் கீழ், எளிமை ஆக்கப்படும்
ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு, ஜி.ஐ.எஸ்., எனும் புவியியல் தகவல் அமைப்பு போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அனைத்து துறைகளிலும் கர்நாடக மேம்பட்ட வருகை மேலாண்மை அமைப்பு அறிமுகம்
எஸ்.டி.சி., எனும் கர்நாடக மாநில தரவு மையத்தில் பாதுகாப்பு செயல்பாட்டு மையம் நவீனமயம்; சைபர் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்
அடுத்த நிதியாண்டில் அரசின் அனைத்து ரொக்கம் மற்றும் ரொக்கம் இல்லா சலுகை திட்டங்களையும் டி.பி.டி., எனும் நேரடி பலன் பரிமாற்றம் தளத்தில் கொண்டு வர நடவடிக்கை
மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்களில் பணிகளை சுலபமாக்க இ - ஆபீஸ் மென்பொருள் உருவாக்கம்.