ADDED : ஜூன் 15, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திருமிற்றைக்கோடு பகுதியில், நேற்று காலை, 8:16 மணிக்கு சிறிய அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3 ஆக பதிவானது. நில அதிர்வு நான்கு வினாடிகள் வரை நீடித்தது.
நில அதிர்வின் போது பலத்த சப்தம் கேட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால், எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், திருச்சூர், குன்னம்குளம் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. அங்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.