ADDED : ஆக 24, 2024 01:45 AM
குடகு, : குடகு, குஷால் நகரின், பல்வேறு லே - அவுட்டுகள், கொப்பா, பைலகொப்பா பகுதிகளில், நேற்று காலை 6:25 மணியளவில், இரண்டு, மூன்று நொடிகள் வரை பூமிக்குள் இருந்து விசித்திரமான சத்தம் கேட்டது.
அந்த சத்தம், இடியாக இருக்கலாம் என, சிலர் கருதினர். ஆனால் அனைத்து இடங்களிலும் ஒரே விதமான சத்தம் கேட்டதால், நிலநடுக்கம் என்ற பீதி எழுந்தது.
குஷால் நகர் அருகிலேயே, ஹாரங்கி அணை உள்ளதால், நிலநடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு வருமோ என்ற அச்சம், மக்களிடையே உருவானது. ஹெப்பாலே, ஹக்கே, கூடு மங்களூரு, முள்ளுசோகே, குஷால்நகர், கொப்பா, பைலுகொப்பா கிராமங்களில் நிலநடுக்க பீதி ஏற்பட்டது.
பெங்களூரின் மூத்த விஞ்ஞானி பிரகாஷ் கூறுகையில், “நிலநடுக்கம் அளவீடு மையங்களில் நிலநடுக்கம் குறித்து பதிவாகவில்லை. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, ஹரியானா, மணிப்பூர் பகுதிகளில், சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது தெரிந்தது,” என்றார்.