ADDED : ஏப் 27, 2024 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராய்ச்சூர்: ராய்ச்சூர், சிந்தனுார் நகரில் அம்பேத்கர் உறைவிட பள்ளி உள்ளது. இங்கு மாணவியர் தங்கி படிக்கின்றனர். நேற்று முன் தினம் மதியம், இவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உணவு நன்றாக இல்லை; அரைகுறையாக வெந்திருந்தது.
இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில், 24 மாணவியருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டனர்.
அவர்களை, உடனடியாக தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லாததால், இரண்டு மணி நேரம் சிகிச்சை கிடைக்காமல் பரிதவித்தனர். அதன்பின் டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்தனர்.
தகவலறிந்து சமூக நலத்துறை அதிகாரிகள், நேற்று மருத்துவமனைக்கு வந்து மாணவியரிடம் நலம் விசாரித்தனர்.

