ADDED : செப் 15, 2024 11:02 PM
பெங்களூரு: எலஹங்காவில் இருந்து தேவனஹள்ளிக்கு புதிய வழித்தடத்தில் மூன்று பஸ்களை இயக்க, பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.
பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
பி.எம்.டி.சி., பெங்களூரு மக்களின் போக்குவரத்துக்கு உயிர் நாடியாக விளங்குகிறது. பயணியரின் வசதிக்காக அவ்வப்போது, புதிய வழித்தடங்களில் பஸ்களை அறிமுகம் செய்கிறது. தற்போது எலஹங்காவில் இருந்து தேவனஹள்ளிக்கு புதிய வழித்தடங்களில் மூன்று பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
எலஹங்காவில் இருந்து தேவனஹள்ளிக்கு பாகலுார், பட்ரமாரேனஹள்ளி, பெட்டகோட்டே, பைஜாபுரா வழியாக நாளை (இன்று) முதல் மூன்று பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் எலஹங்காவில் இருந்து தேவனஹள்ளிக்கு 12 டிரிப், தேவனஹள்ளியில் இருந்து எலஹங்காவுக்கு, 12 டிரிப்புகள் இயங்கும்.
கெங்கேரியில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு நான்கு பஸ்கள், 12 டிரிப்புகள் இயக்கப்படும். இந்த பஸ்கள் சீனிவாசபுரா கிராஸ், கரியண்ண பாளையா, ரகுவனஹள்ளி கிராஸ், ஆவலஹள்ளி, அஞ்சனாபுரா, பசவனபுரா கேட், பெட்டதாசனபுரா வழியாக செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

