ADDED : ஆக 29, 2024 02:36 AM
மைசூரு : யானை மோதியதில் வீட்டின் சுவர் இடிந்து, இடிபாடுகளில் சிக்கி முதியவர் உயிரிழந்தார்.
மைசூரு எச்.டி., கோட்டே தாலுகா, கோலுார் ஆடி கிராமத்தில் வசித்தவர் காளா, 78. இவரது வீடு வனப்பகுதியை ஒட்டி அமைந்துஉள்ளது.
நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்பக்கம் உள்ள, சிறிய அறையில் காளா துாங்கினார்.
நேற்று அதிகாலை 4:30 மணிக்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, காளா துாங்கிக் கொண்டு இருந்த அறையின் சுவரை, தும்பிக்கையால் மோதித் தள்ளிவிட்டுச் சென்றது.
சுவர் இடிந்து காளாவின் மீது விழுந்தது. சுவரின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடியவரை, குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
காளா வீட்டை தாக்கிய, காட்டு யானை மீண்டும் கிராமத்திற்குள் வர வாய்ப்பு உள்ளது.
அந்த யானை நடமாட்டத்தை கண்காணித்து சிறைப்பிடிக்க வேண்டும்' என, வனத்துறையினருக்கு, கோலுார்ஆடி கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

