ADDED : மே 03, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி: பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 4ம் தேதியும், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே 5ம் தேதியும் பெலகாவியில் பிரசாரம் செய்கின்றனர்.
கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநில எல்லையான பெலகாவியில் வசிக்கும் மராத்தியர்களின் ஓட்டுகளை பெற, பா.ஜ., வியூகம் அமைத்துள்ளது.
இதற்காக மஹாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தேர்தல் பிரசாரம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, நாளை ஏக்நாத் ஷிண்டே வருகை தருகிறார்.
அதுபோன்று, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே வரும் 5ம் தேதி வருகிறார்.
இதே வேளையில், 'பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருவரும் வர வேண்டாம்' என, எம்.இ.எஸ்., அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.