உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 09, 2024 06:15 AM
அ நிறம் | அளவு
தங்கவயல்: தங்கவயலில் தேர்தல் பணிகள் குறித்து கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா ஆய்வு செய்தார்.
கோலார் மாவட்ட தேர்தல் அதிகாரியான, மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா, தங்கவயல் எஸ்.பி., சாந்தராஜு ஆகியோர் தங்கவயல் நகராட்சி அலுவலகம், தாலுகா நிர்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர்.
லோக்சபா தேர்தலில் அதிகளவு ஓட்டுகள் பதிவு செய்ய வேண்டும். இதற்காக நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள பணிகளின் விபரங்களை கேட்டறிந்தனர்.
'சோதனைச் சாவடிகளில் ஒவ்வொரு வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும். தமிழக, ஆந்திர மாநில எல்லைகளில் கடும் சோதனை செய்ய வேண்டும்' என்றனர்.
