தேர்தல் களம்: மனு தாக்கலில் கூட்டம் சேர்க்க காங்., திட்டம்
தேர்தல் களம்: மனு தாக்கலில் கூட்டம் சேர்க்க காங்., திட்டம்
ADDED : ஏப் 01, 2024 07:00 AM
மாண்டியா : சட்டசபை தேர்தலில், மாண்டியா மாவட்டத்தின் ஆறு தொகுதிகளில், காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியை கைப்பற்ற, காங்கிரஸ் திட்டம் வகுத்துள்ளது.
மாண்டியா லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக தொழிலதிபர் வெங்கட ரமணேகவுடா களமிறங்கி உள்ளார். இவர் 'ஸ்டார் சந்துரு' என்றே பிரபமடைந்தவர். மாண்டியாவில் இவர் வேட்பாளர் என்றாலும், இது குமாரசாமி - அமைச்சர் செலுவராயசாமி இடையிலான போட்டி என்றே கருதப்படுகிறது.
கர்நாடகாவின், 'ஹைவோல்டேஜ்' தொகுதியாக கருதப்படும் மாண்டியாவை, இம்முறை கைப்பற்றியே ஆக வேண்டும் என, காங்., தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். வேட்புமனு தாக்கலின் போது, ஒரு லட்சம் மக்களை சேர்த்து, தன் சக்தியை காண்பிக்க தலைவர்கள் தயாராகின்றனர்.
எனவே அமைச்சர் செலுவராயசாமி, அனைத்து தாலுகாக்களிலும் பொது கூட்டம் நடத்தி, தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்.

