தேர்தல் அலுவலர் தற்கொலை காங்கிரசார் மீது குற்றச்சாட்டு
தேர்தல் அலுவலர் தற்கொலை காங்கிரசார் மீது குற்றச்சாட்டு
ADDED : ஏப் 27, 2024 11:05 PM
துமகூரு: தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டார்.
துமகூரு, குனிகல்லின் ஹளேவூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட, கிச்சவாடி கிராமத்தில் தேர்தல் பணிக்காக, நீரகன்டி சந்திரசேகர், 45, நியமிக்கப்பட்டிருந்தார். நேற்று முன் தினம் ஓட்டுப் பதிவு நாளன்று, பணியில் ஈடுபட்டிருந்தார்.
இவர் பா.ஜ.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை கவனித்து காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அரசு பணியில் இருந்தும், ஒரு கட்சிக்காக பிரசாரம் செய்வதை, வீடியோவில் பதிவு செய்து கொண்டதுடன், சந்திரசேகரையும் தாக்கினர்.
மனம் வருந்திய இவர், ஓட்டுச்சாவடி எதிரில் இருந்த உயரமான தண்ணீர் தொட்டியில், நேற்று முன் தினம் இரவு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காங்கிரஸ் தொண்டர்களே காரணம் என, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
ஹுலியூர்துர்கா போலீசார் விசாரிக்கின்றனர்.

