நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தேர்தல்: "ரோடு ஷோ" வில் பிரியங்கா பேச்சு
நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தேர்தல்: "ரோடு ஷோ" வில் பிரியங்கா பேச்சு
UPDATED : ஏப் 15, 2024 06:04 PM
ADDED : ஏப் 15, 2024 05:46 PM

ஜெய்ப்பூர்: 'வரும் லோக்சபா தேர்தல் எந்தக் கட்சிக்கும் அல்ல. நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தேர்தல்' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டத்தில் நடந்த 'ரோடு ஷோ' வில் பிரியங்கா பேசியதாவது: மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். 10 ஆண்டுக்கால பா.ஜ., ஆட்சியில் வேலையின்மை மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. கருப்புப் பணத்தின் உண்மை தேர்தல் பத்திரங்கள் வடிவில் வெளிவந்தது.
ஜனநாயகத்தை அழிக்க முயற்சி
தேர்தல் பத்திரங்கள் மூலம் பணத்தை நன்கொடையாகக் கொடுங்கள், வியாபாரம் செய்யுங்கள்' என்று நடந்து வந்த ஊழல் வெளிவந்துள்ளது. நாட்டில் ஜனநாயகம் உள்ளது, இங்குள்ள தலைவர்கள் எப்போதும் மக்களை உயர்ந்தவர்களாக வைத்திருந்தார்கள்.
தற்போது ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் லோக்சபா தேர்தல் எந்தக் கட்சிக்கும் அல்ல. நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தேர்தல். அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.

