அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல்: பிரசாரத்தில் ராகுல் பேச்சு
அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல்: பிரசாரத்தில் ராகுல் பேச்சு
UPDATED : மே 06, 2024 04:13 PM
ADDED : மே 06, 2024 02:20 PM

போபால்: 'அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ., மாற்ற விரும்புகிறது. இது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல்' காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
மத்திய பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
மக்கள் நலனுக்காக தற்போதுள்ள 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை காங்கிரஸ் அரசு உயர்த்தும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நாட்டின் அரசியலின் திசையை மாற்றும். மக்கள் உரிமைக்காக நாங்கள் என்ன செய்தாலும், ஆட்சிக்கு வந்ததும் அதை மாற்றி விடுகிறார்கள். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது ஒரு புரட்சிகரமான வேலை. அது இந்திய அரசியலையே மாற்றும். நாங்கள் அதை செய்வோம்.
150 தொகுதிகள் கூட பா.ஜ.,வுக்கு 'நோ'
அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ., மாற்ற விரும்புகிறது. இது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல். நாங்கள் அதைக் காப்பாற்ற முயற்சிக்கிறோம். பா.ஜ.,வுக்கு 150 தொகுதிகளில் கூட வெற்றி கிடைக்காது. பா.ஜ.,வினர் மக்களின் உரிமைகள் அனைத்தையும் பறிக்க விரும்புகிறார். தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்குத் தேவையான இடஒதுக்கீட்டை வழங்குவோம். இவ்வாறு ராகுல் பேசினார்.