மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப்பெட்டி: ராகுல் சொல்கிறார்!
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப்பெட்டி: ராகுல் சொல்கிறார்!
ADDED : ஜூன் 16, 2024 12:05 PM

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப் பெட்டி என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் கூறியிருந்தார். இந்நிலையில், இந்தியாவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப் பெட்டி என காங்., எம்.பி., ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.
வெளிப்படைத்தன்மை
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப் பெட்டி. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ஆராய யாரையும் அனுமதிக்கப்படுவதில்லை. நிறுவனங்கள் பொறுப்புக் கூறல் இல்லாதபோது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.