மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்: மீண்டும் ராகுல் விமர்சனம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்: மீண்டும் ராகுல் விமர்சனம்
ADDED : ஜூன் 17, 2024 05:33 PM

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தற்போது வரை கருப்பு பெட்டி (பிளாக் பாக்ஸ்) யாகவே உள்ளது என காங்., எம்.பி ராகுல் மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து, அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தற்போது வரை கருப்பு பெட்டியாகவே உள்ளது. வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய முடியவில்லை எனில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒழிக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். பொது மக்களுக்கு வெளிப்படையான தேர்தல் செயல்முறைகளில் மட்டுமே பாதுகாப்பு உள்ளது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
இந்தியாவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப் பெட்டி என நேற்று (ஜூன் 17) காங்., எம்.பி., ராகுல் கூறி இருந்தார். இன்று அவர் மீண்டும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

