sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யானைகள் கணக்கெடுப்பு துவக்கம்

/

யானைகள் கணக்கெடுப்பு துவக்கம்

யானைகள் கணக்கெடுப்பு துவக்கம்

யானைகள் கணக்கெடுப்பு துவக்கம்


ADDED : மே 24, 2024 06:15 AM

Google News

ADDED : மே 24, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாம்ராஜ்நகர்: கர்நாடகாவில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று ஆரம்பமானது.

கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய தென் மாநிலங்களில் யானைகளை கணக்கெடுக்க, மத்திய வனத்துறை அமைச்சகம், அந்தந்த மாநில வனத்துறை நிர்வாகத்திற்கு சமீபத்தில் உத்தரவிட்டது.

அதன்படி, கர்நாடகாவில், மே 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் யானைகள் இருக்கும், பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்தில், அதன் இயக்குனர் பிரபாகரன் தலைமையில் நேற்று யானைகள் கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பமானது. இது போன்று, பிலிகிரி ரங்கா வனப்பகுதி, மலை மாதேஸ்வரன் வனப்பகுதி, காவிரி வனப்பகுதி ஆகிய இடங்களிலும் நேற்று யானைகள் கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பமானது.

முதல் நாளான நேற்று, மாணவர்கள், தன்னார்வலர்கள், வனத்துறையுடன் இணைந்து, வனப்பகுதியில் யானைகள் நடமாடும் வழித்தடங்களில், காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஆய்வு செய்தனர்.

அடிக்கடி மழை பெய்ததால், ஊழியர்கள் காட்டில் நடமாட முடியாமல் அவதிப்பட்டனர். இன்று யானைகளின் சாணம், காலடி போன்ற தடயங்களை வைத்து கணக்கெடுப்பு பணிகள் நடக்கின்றன.

நாளை, நீர் நிலைகளில் வரும் யானைகள் கணக்கெடுக்கப்படுகின்றன. இதற்காக பயிற்சி பெற்ற ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தப்பித்த ஊழியர்


சாம்ராஜ்நகர் எலந்துார் தாலுகாவின் பிலிகிரி ரங்கா வனப்பகுதயின், அமேகெரே என்ற இடத்தில், வனத்துறை ஊழியர்கள் நேற்று யானைகள் கணக்கெடுப்பு பணியில் மூன்று பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு ஊழியர் மீது எதிர்பாராத விதமாக, ஒற்றை யானை, தாக்க வந்தது. உடனே அங்கிருந்து தப்பியோடினார். கீழே விழுந்து, எழுந்ததில் காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். நுாலிழையில் அவர் உயிர் தப்பினார்.






      Dinamalar
      Follow us