தகுதியானவர் கிடைக்கவில்லையா: பேச தெரியாதவர் வேட்பாளரா: குமுறும் குஜராத் பா.ஜ., சிட்டிங் எம்.பி.,
தகுதியானவர் கிடைக்கவில்லையா: பேச தெரியாதவர் வேட்பாளரா: குமுறும் குஜராத் பா.ஜ., சிட்டிங் எம்.பி.,
UPDATED : மே 12, 2024 09:15 PM
ADDED : மே 12, 2024 09:04 PM

காந்திநகர்: சரியாக பேச தெரியாதவர், நேர் காணல் கொடுக்க முடியாத சாதாரண நபர் வேட்பாளராக உள்ளார் என குஜராத் மாநில சிட்டிங் எம்.பி., குமுறி உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளில் 25 தொதிகளுக்கு மூன்றாம் கட்ட தேர்தலின் போது வாக்குபதிவு நடந்து முடிந்தது. சூரத்தொகுதி பா.ஜ.,வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநிலத்தின் அம்ரேலி தொகுதியில் மூன்று முறை (2009,2014,2019) எம்.பி.,யாக இருந்தவர் நரேன் கச்சாடியா, தற்போதைய 2024 தேர்தலில் அவரை விட்டு விட்டு அம்ரேலி மாவட்ட பஞ்., தலைவரான பாரத் சுதாரியா எம்,பியாக நிறுத்தப்பட்டார்.
இதனிடையே தன்னுடைய தொண்டர்கள் மத்தியில் பேசிய நரேன் கச்சாடியா இந்த முறை வேட்பாளரை தேர்ந்தெடுத்ததன் மூலம் அம்ரேலியின் 17.5 லட்சம் வாக்காளர்களுக்கு நீங்கள் துரோகம் செய்து விட்டீர்கள். தகுதியான பல தலைவர்களுக்கு சீட்கொடுத்திருந்து இருக்கலாம். ஆனால் சரியாக பேச, நேர்காணல் கொடுக்க முடியாத ஒரு சாதாரண நபரைத் நிறுத்தி உள்ளீர்கள்.இந்த முறை, கட்சித் தொண்டர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் உற்சாகம் இல்லாததால், அம்ரேலியில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன என்று பேசும் வீடியோ வைரலானது
இந்நிலையில் பாரத் சுதாரியா நரேன் கச்சாடியாவிற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். “லோக்சபா வேட்பாளர்களை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜகவின் நாடாளுமன்ற தேர்வு குழுவினர் தேர்வு செய்கின்றனர். எனவே, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜகவின் நாடாளுமன்றக் குழுவை அவமதிக்கிறீர்கள்.
கடந்த காலங்களில் கட்சி எனக்கு எந்தப் பொறுப்பையும் வழங்கிய போதெல்லாம் நான் உங்களுக்கு நன்றி தெரிவித்தேன் என்பதை இந்தக் கடிதத்தின் மூலம் நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த முறை கட்சி ஏன் டிக்கெட் மறுத்தது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதை நீங்கள் மக்களுக்கு உணர்த்துவீர்கள் என்று நம்புகிறேன். என கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.