இ.பி.எஸ்., தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது எப்படி?: தேர்தல் ஆணையம் விளக்கம்
இ.பி.எஸ்., தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது எப்படி?: தேர்தல் ஆணையம் விளக்கம்
ADDED : மே 13, 2024 04:29 PM

புதுடில்லி: இ.பி.எஸ்., தரப்புக்கு லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்து பி.ஜெயநரசிம்மன் என்பவர் ஆர்.டி.ஐ.,யில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, ‛‛ஆணைய விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளின் படியே சின்னம் ஒதுக்கப்பட்டது' என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். அவர் பா.ஜ., கூட்டணியில், ராமநாதபுரம் தொகுதியில் பலா பழச் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். இ.பி.எஸ்., இடம் உள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்க பல்வேறு முயற்சிகளை பன்னீர் செல்வம் மேற்கொண்டார். ஆனால் அவர் முயற்சி எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது.
ஆணைய விதிகள்
இந்நிலையில், இ.பி.எஸ்., தரப்புக்கு லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது எப்படி? என பி.ஜெயநரசிம்மன் என்பவர் ஆர்.டி.ஐ.,யில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, ‛‛ஆணைய விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளின் படியே சின்னம் ஒதுக்கப்பட்டது' என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை மீட்க பன்னீர்செல்வம் பல முறை நீதிமன்றத்தை நாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.