முன்னாள் அணு விஞ்ஞானி மாயம் : வலைவீசி தேடும் போலீஸ்
முன்னாள் அணு விஞ்ஞானி மாயம் : வலைவீசி தேடும் போலீஸ்
UPDATED : செப் 11, 2024 12:49 PM
ADDED : செப் 10, 2024 09:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: முன்னாள் அணு விஞ்ஞானி திடீரென காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை பந்த்ராவை சேர்ந்தவர் வினாயக் கோல்வங்கர்,76, விஞ்ஞானியான இவர் பி.ஏ.ஆர்.சி., எனப்படும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி பணிநிறைவு பெற்றார். மும்பை நியூ எம்.ஐ.ஜி. காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த செப். 5-ம் தேதி முதல் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இவரது மனைவி வைஷாலி என்பவர் போலீசில் கொடுத்துள்ள தகவலின் படி நிர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். அவரை கண்டுபிடித்து தகவல் தருபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் சன்மானம் அறிவித்துள்ளனர்.