ADDED : ஏப் 09, 2024 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முல்பாகல்: வெடி பொருட்களை கடத்தி சென்ற கார்யில் பிடிபட்டது.
கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகா, நங்கிலி சோதனைச் சாவடியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு சென்ற, 'ஸ்விப்ட்' காரை தடுத்து நிறுத்தினர்; காரை சோதனை செய்தனர்.
காரில் 1,200 ஜெலட்டின் குச்சிகள், 7 டெட்டனேட்டர்கள், 6 பெட்டி காப்பர் ஒயர்கள் இருந்தன. அவைகளுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை.
காரில் இருந்த ஹாசிப் ஹசரத், 35, என்பவரை போலீசார் கைது செய்தனர். இன்னொருவர், தலைமறைவானார். ஹாசிப் ஹசரத்திடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

